ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
Friday, October 19, 2012
கல்விக் கோயில்: சர்வதேச கைகள் கழுவும் நாள் விழா
கல்விக் கோயில்: சர்வதேச கைகள் கழுவும் நாள் விழா: எமது பள்ளியில் சர்வதேச கைகள் கழுவும் நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதாக பள்ளி மாணவர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு ஊர்வலம் ப...
Sunday, October 14, 2012
கல்விக் கோயில்: மனவளக் கலை யோகா பயிற்சிகள்
கல்விக் கோயில்: மனவளக் கலை யோகா பயிற்சிகள்: இன்றைய உலகம் அவசர உலகம் மட்டுமல்ல, ஆபத்தான உலகமும் கூட. ஆம், மனிதனை சோம்பேரி ஆக்கி, இளம் வயதிலேயே அனைத்து நோய்களையும் வரவழைக்க...
Saturday, October 13, 2012
கல்விக் கோயில்: திறன் வளர் போட்டிகள்
கல்விக் கோயில்: திறன் வளர் போட்டிகள்: ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் குழந்தைகள் கட்டாயக் கல்வி உரிம...
Monday, October 8, 2012
கல்விக் கோயில்: JOY OF GIVING WEEK விழா
கல்விக் கோயில்: JOY OF GIVING WEEK விழா: இன்று ( 08.10.2012) எமது பள்ளியில் JOY OF GIVING WEEK எனும் மகிழ்வோடு மற்றவர்களுக்கு உதவிடும் மனப்பான்மையை வளர்த...
Tuesday, August 28, 2012
பாராட்டு விழா........
இன்று 26.08.2012 ல் ஊற்றங்கரை விடுதலை வாசகர் வட்டம் சார்பில் மனித நேயக் கருத்தங்கமும், திரு.வி.க. படத்திறப்பும் கவி.செங்குட்டுவன்(எ) செ. இராஜேந்திரன் ஆகிய எனக்கு பாராட்டு விழாவும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு அரசு ஆண்கள் மேநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு ப. பொன்னுசாமிஅவர்கள் தலைமை தாங்கினார். திரு செ.சிவராஜ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். விழா அறிமுக உரையை திரு ஆடிட்டர் இராசேந்திரன் அவர்கள் ஆற்ற வாழ்த்துரையை திருவாளர்கள் மருத்துவர் அருண் தேவராசு, ச. ஞானசேகரன், வி.ஜி. இளங்கோ, தணிகை ஜி. கருணாநிதி, ஆகியோர் வழங்கினர். பின்னர் திரு பழ. வெங்கடாசலம் அவர்களின் பாராட்டு உரைக்கு பிறகு எனக்கு சிறப்பு செய்யப்பட்டது. அதன் பின் நான் ஏற்புரை வழங்கினேன்.
பின்னர் தமிழ்த் தென்றல் திரு.வி.க. அவர்களின் படத்தை அதியமான் மகளிர் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் செல்வி பிச்சை.முத்துஇலட்சுமி அவர்கள் திறந்து வைத்து அவரைப் பற்ரி கருத்துரை வழங்கினார்.அதன் பின்னர் ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியின் உதவிப் பேராசிரியர் திரு க.சிராஜுதீன் அவர்கள் யார் மனிதன்? என்ற தலைப்பில் மனித நேய கருத்தரங்க கருத்துரை ஆற்றினார்.
இறுதியில் ஜோ.ஈ.வெரா. திருப்பதி நன்றி கூறினார். விழா ஒருங்கமைப்புப் பணியை பழ. பிரபு அவர்கள் திறம்பட செய்தார்.
Friday, August 24, 2012
வாருங்கள்… வாழ்த்துங்கள்……
ஊத்தங்கரையில்
இயங்கி வரும் விடுதலை
வாசகர் வட்டம் என்ற அமைப்பு
மாதம்தோறும் ஓர் நிகழ்வை நடத்தி வருகிறது. அதில் அந்தந்த மாதத்தின் சிறப்பு நாட்கள்
மற்றும் சிறப்பாளர்களின் பிறந்த நாட்களை அடிப்படையாக வைத்து கருத்தரங்குகளும், படத்
திறப்பும், ஊரின் சிறந்த சாதனையாளர்களை அடையாளம் காட்டிடும் வகையில் மாதம் ஒருவரைத்
தேர்வு செய்து அவருக்கு பாராட்டு விழாவும் நடத்துகிறது. அவ்வகையில் இம்மாதம் 19.08.2012 உலக மனிதநேய நாள் ஆதலால், உலக மனித நேயக் கருத்தரங்கமும், 26.08.2012 திரு.வி.க. பிறந்த நாள் ஆகையால், தமிழ்த் தென்றல் திரு.வி.க படத்திறப்பும் கவி.செங்குட்டுவன் ஆகிய எனக்கு பாராட்டு
விழாவும் வரும் 26.08.2012 ஞாயிறு அன்று நடத்த உள்ளனர். எனவே அவ்விழாவில்
அனைவரும் பங்கு பெற்று விழாவினைச் சிறப்பிக்கவும், என்னை வாழ்த்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.
அழைப்பு இணைத்துள்ளேன்.
Sunday, July 22, 2012
Monday, June 18, 2012
கல்விக் கோயில்: கல்விக் கோயில்: பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் ...
கல்விக் கோயில்: கல்விக் கோயில்: பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் ...: கல்விக் கோயில்: பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் : எமது பள்ளியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் அதன் தலைவர் திருமதி வி. பத்...
Sunday, June 17, 2012
கல்விக் கோயில்: பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்
கல்விக் கோயில்: பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்: எமது பள்ளியில் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் அதன் தலைவர் திருமதி வி. பத்மா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பள்...
Saturday, May 19, 2012
Wednesday, February 1, 2012
கல்விக் கோயில்: இந்திய நாட்டின் 63வது குடியரசு நாள் விழா
கல்விக் கோயில்: இந்திய நாட்டின் 63வது குடியரசு நாள் விழா: ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று(26.01.2012) இந்திய நாட்டின் 63வது குடியரசு நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ள...
கல்விக் கோயில்: தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள் விழா
கல்விக் கோயில்: தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள் விழா: ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் நடுநிலைப் பள்ளியில் இன்று(25.01.2012)தேசிய வாக்காளர் விழிப்புணர்வு நாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி...
கல்விக் கோயில்: பள்ளியில் பொங்கல் விழா.
கல்விக் கோயில்: பள்ளியில் பொங்கல் விழா.: எமது பள்ளியில் ( ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர், ஊத்தங்கரை ஒன்றியம் ) இன்று பொங்கல் விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. முன்னதா...
கல்விக் கோயில்: கிராமக் கல்விக்குழு நாள் விழா
கல்விக் கோயில்: கிராமக் கல்விக்குழு நாள் விழா: ஊத்தங்கரை ஒன்றியம் ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கிராமக் கல்விக்கு...
Tuesday, January 10, 2012
Friday, January 6, 2012
தமிழ் மரபு அரக்கட்டளைக் குழுவினரின் பள்ளிப்பார்வை....
ஜெர்மனி நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகெங்கும் உள்ள கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றில் காணப்படும் தமிழ் மொழி சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த, தமிழ் கல்வி,கலை,கலாச்சாரம் சார்ந்த செய்திகளை எல்லாம் நேரடியாகச் சென்று அவற்றைத் திரட்டி, வருங்காலச் சந்ததினர் பயன்படுத்தும் வகையில் மின்னாக்கம் செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தற்போது தமிழகம் வந்துள்ள இவ்வமைப்பின் தலைவர் ஜெர்மனி திருமதி சுபாஷினி ட்ரெம்மல், துணைத்தலைவர் கொரியா திரு நா.கண்ணன், பெங்களூரு ஸ்வர்ணலட்சுமி ஆகியோர் இன்று எமது பள்ளிக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது பள்ளியின் வளாகத் தூய்மை, தோட்ட பராமரிப்பு, சுற்றுச் சூழலை காத்திடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மக்கும், மக்காத குப்பைக் குழிகள், மூலிகைத் தோட்டம் ஆகியவற்றைப் பார்த்து மகிழ்ச்சி தெரிவித்தனர். அதே போல் மாணவர்களுடன் நீண்ட நேரம் உரையாடிய அவர்கள் அவர்களின் கல்வி, திறன்வெளிப்பாடு ஆகியவற்றை கேட்டறிந்ததோடு தற்போது தமிழகத்தில் உள்ள கல்வித் திட்டம் பற்றியும் அதன் நடைமுறைச் செயலாக்கம் பற்றியும் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களிடம் கேட்டறிந்து மகிழ்சி தெரிவித்தனர். நிறைவாக இப்பள்ளிபோல் அனைத்து பள்ளிகளும் சிறப்பாக இயங்க ஊக்குவிக்கும் வகையில் தமிழ் மரபு அறக்கட்டளை மூலம் உதவிகள் செய்திட முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் உறுதி அளித்தனர்.
Subscribe to:
Posts (Atom)
அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி
-
இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...
-
ஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...
-
தமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...
-
இன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...
-
இன்று இப்பள்ளியில் கணினி வழிக் கல்வி மையத் துவக்க விழா பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. வ...