Wednesday, August 17, 2011

65 வது இந்தியச் சுதந்திர தினவிழா.

15.08.2011 இந்தியத் திருநாட்டின் 65 வது சுதந்திர தின விழா எமது பள்ளியில் வழக்கமான உற்சாகத்தோடு கொண்டாடப்பட்டது. முதலில் பள்ளியில் பள்ளி கல்விக் குழுத் தலைவர் திரு இராதாநாகராஜ் அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்திட  பள்ளி விழா துவங்கியது.
பின்னர் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளும் இலக்கியப் போட்டிகளும் நடைபெற்றது. அதன் பின் புதிய தலைமுறை அறக்கட்டளையின் ஏற்பாட்டின் பேரில் சிறப்புக் கருத்தரங்கம் பள்ளி மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவோடு துவங்கியது.
விழாவிற்கு பள்ளி கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான    திரு இராதாநாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்  திரு கொ.பா.திருவேங்கடம், துனைத் தலைவர் திரு கொ. மா. எத்திராசு, திருஜெயராமன், நல்லவன்பட்டி புதூர் தலைமை ஆசிரியர் திரு பா. ஆறுமுகம், புதிய தலைமுறை அறக்கட்டளையின் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு பா. சக்திவேல் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் புதிய சமச்சீர்கல்வி பாட நூல்கள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றது.
அதன்பின் ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விரிவுரையாளர்கள் திரு சி. கோவிந்தராஜ் அவர்கள் ஆளுமைத் திறன் மேம்பாடு எனும் தலைப்பிலும், திரு. செந்தில்நாதன் அவர்கள் மின் சிக்கனம் எனும் தலைப்பிலும் கருத்துரை நிகழ்த்தினர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு பி. பாண்டுரங்கன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை மற்ற உதவி ஆசிரியர்களான திருமதி சி. தாமரைச்செல்வி, திரு.சே. லீலாகிருஷ்ணன், திரு. நா. இராஜசூரியன் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
























Monday, August 8, 2011

அழைப்பிதழ்,

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி