Friday, February 26, 2010

இளைஞர் செஞ்சிலுவைச் சங்க முகாம்.

ஊத்தங்கரை ஒன்றிய அளவிலான இளைஞர் செஞ்சிலுவைச் சங்க இரண்டு நாள் முகாம் இன்று ஊத்தங்கரை அரசு ஆணகள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கியது,
 விழாவில் முன்னதாக செஞ்சிலுவைச் சங்க கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

முகாம் துவக்க விழாவிற்கு பள்ளித் தலைமையாசிரியர் திரு பி.பொன்னுசாமி அவர்கல் தலை தாங்கினார்.
மாவட்ட கண்வீனர் திரு சி.செங்குட்டுவன் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.


Monday, February 22, 2010

கல்விச் சுற்றுலா

அனைவருக்கும் கல்வித் திட்டம் மூலம் நடத்தப்பட்ட மாணவர்களுக்கான இலவசக் கல்விச் சுற்றுலாவில் எமது பள்ளி மாணவர்கள்.


                 அனைவருக்கும் கல்வித் திட்ட  மாநில திட்ட இயக்குநரின் அறிவுரையின் பேரில் அனைத்து மாவட்டங்களிலும் மாணவர்களுக்கான இலவசக் கல்விச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி தென் மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் சென்னை, மாமல்லபுரம் ஆகியவற்றிற்கும் வட மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
                       அவ்வகையில் எமது கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் அழைத்துச் செல்லப்பட்ட குழுவில் ஊத்தங்கரை ஒன்றியம் சார்பில் எமது பள்ளி மாணவர்கள் எட்டு பேர் இடம் பெற்றனர்.
                             அவர்கள் 09.02.2010 இரவு 9.30 மணிக்கு தருமபுரி தொடருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்று மீள 12.02.2010 2.30 மணிக்கு நலமுடன் தருமபுரி வந்து சேர்ந்தனர்.
                   இடையில் தஞ்சை சாகுந்தலா மஹால், பிரகதீசுவரர் ஆலயம், மராட்டியர் அரண்மனை, கல்லணை, சுவாமிமலை, சித்தன்ன வாசல், தாராசுரம், ஸ்ரீரங்கம், முக்கொம்பு ஆகியவற்றைக் கண்டு களித்தனர்.


அன்புடன்............
>
கவி.செங்குட்டுவன்,
>
ஊத்தங்கரை - 635207.
>
அலைபேசி : 9842712109 / 9965634541,
>
தொலைபேசி : 04341- 223011 / 223023.
>
மின்னஞ்சல் : rajendrankavi@yahoo.co.in
> / kavi.senguttuvan@gmail.com
>
வலைப்பூ :
> http//pumskottukarampatti.blogspot.com

Friday, February 19, 2010

மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா.

                       அரசு உயர் நிலைப் பள்ளி மிட்டப்பள்ளியில் மாணவர்களுக்கான பரிசளிப்பு விழாவும் பள்ளிப் புரவலர் திட்டத் தொடக்க விழாவும் நடைபெற்றது. அதில் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் கலந்துக்கொண்டு பள்ளிப் புரவலர் திட்டத்தை துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். 

பள்ளிப் பார்வை

மாவட்ட சுகாதாரத் திட்ட ஒருங்கிணைபாளர் திருமதி நிலோபர் பானு அவர்கள் எமது பள்ளியை பார்வையிட்டு  சுகாதார நிலை பற்றி ஆய்வு செய்து பாராட்டுக்களைத் தெரிவித்தார். உடன் ஒன்றிய ஆணையாளர்.சுகாதார விழிப்புணர்வுக் கூட்டம்.

சுகாதார விழிப்புணர்வுக் கூட்டம்.
                கேத்துநாய்கன்பட்டி நடுநிலைப் பள்ளியில் மூன்றம்பட்டி ஊராட்சித் தலைவர் திருமதி இராதா நாகராஜ் அவர்கள் தலைமையில் சுகாதார விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது அதில் எமது பள்ளி மாணவர் மு. தங்கவேல் பேச்சுப் போட்டியில் கலந்துக்கொண்டு சிறப்புப் பரிசு பெற்றார். அருகில் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் மற்றும் மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்.

Monday, February 1, 2010

பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டம்.                  எமது பள்ளியில் இன்று 01.02.2010 மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர். கலைஞர் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் சார்பில் பார்வைக் குறைபாடுடைய பள்ளி மாணவர்களுக்கான ”இலவச கண்ணாடிகள் வழங்கும் விழா” பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழு தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சி தலைவருமான திரு இராதா நாகராஜன் அவர்கள் தலைமை தாங்கினார். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் திரு செ. இராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார். அவர் தனது வரவேற்புரையில் பள்ளிச் சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் பற்றியும் அதன் மூலம் மாணவர் பெறும் நண்மைகள் பற்றியும் அரசால் தற்போது வழங்கப்பட்டுள்ள தரமான கண்ணாடிகளின் பாதுகாப்பு முறைகள் பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார்.
                           விழாவில் பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி . திருவேங்கடம், கட்டிடக் குழுத் தலைவர் திரு மோகன். துனைத் தலைவர் திரு கே.எம். எத்திராசு உள்ளிட்டோரின் வாழ்த்துரைக்குப் பின் மாணவர்களுக்கு இலவச கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இறுதியில் உதவி ஆசிரியை திருமதி சி.தாமரைச்செல்வி அனைவருக்கும் நன்றி கூறினார்.
                    விழாவிற்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் திரு சி.சிவா, திரு சே.லீலாகிருஷ்ணன், திரு.ந. இராஜசூரியன் ஆகியோர் செய்தனர்.

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி