Friday, December 30, 2011

அனைவருக்கம் வணக்கம்.

                    நான் தற்போது பணியாற்றும் கொட்டுகாரம்பட்டி உயர் துவக்கப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டமையால் நான் தற்போது பணியாற்றும் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர் - க்கு மாறுதல் மூலம் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளேன். எனவே எனது பள்ளிச் செயல்பாடுகளைத் தொடர வேண்டி கீழ்க்கண்ட வலைப்பூ முகவரிக்கு எனது கல்விக் கோயில் எனும் இவ்வலைப்பூவை மாற்றம் செய்துள்ளேன். எனவே என்னை இதுவரையில் ஊக்குவித்தவர்கள் அனைவரும் பின் கண்ட புதிய வலைப்பூ முகவரியில் தம்மை இணைத்துக்கொண்டு இன்று போல் என்றும் எனக்கும் எனது பள்ளி வளர்ச்சிக்கும் ஆதரவு அளித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.http://www.kalvikoyil.blogspot.com

இவண்........
என்றும் கல்விப் பணியில் உங்கள்.....
கவி.செங்குட்டுவன் @ செ.இராஜேந்திரன்.

Thursday, December 22, 2011

கடமைக்கு கிடைத்த அங்கீகாரம்.

எமது பள்ளி நடுநிலைப் பள்ளியில் இருந்து உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு விட்டமையால் நான் வேறு பள்ளிக்கு மாறுதல் மூலம் செல்லும் நிலையில் கொட்டுகாரம்பட்டி பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட வழியனுப்பு விழா என்னை மெய்சிலிர்க்க வைத்தது. ஆம் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்,பள்ளி வளர்ச்சிக் குழுத் தலைவர், ஊராட்சி மன்றத் தலைவர்கள், உராட்சி மன்றக் குழு உறுப்பினர்கள், ஊரின் முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் ஒருமித்து பள்ளிக்கு வந்து என்னைப் பாராட்டி மரியாதை செய்து வழி அனுப்பி வைத்தமை என்பது இதுநாள் வரையில் ஆற்றிய கடமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதுகிறேன். இதில் மிகவும் குறிப்பிட வேண்டிய சிறப்புச் செய்தி இவ்வூரில் பள்ளி துவங்கி 52 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்ட நிலையில் இதுவரையில் எந்த ஆசிரியருக்கும் இது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பெறவில்லை என்பதே, எனவே கடமை எங்கு சரியாக நிறைவேற்றப்படுகிறதோ அங்கு அதற்கான மரியாதை கட்டாயம் கிடக்கும் என்பது உறுதி.




Wednesday, December 21, 2011

அனைவருக்கம் வணக்கம்.

அனைவருக்கம் வணக்கம்.
              நான் தற்போது பணியாற்றும் கொட்டுகாரம்பட்டி உயர் துவக்கப் பள்ளி தற்போது உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டமையால் நான் தற்போது பணியாற்றும் கொட்டுகாரம்பட்டி நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருந்து விடுவித்துக்கொண்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, ஜோதிநகர் - க்கு மாறுதல் மூலம் தலைமை ஆசிரியராகப் பொறுப்பேற்றுள்ளேன். எனவே எனது பள்ளிச் செயல்பாடுகளைத் தொடர வேண்டி கீழ்க்கண்ட வலைப்பூ முகவரிக்கு எனது கல்விக் கோயில் எனும் இவ்வலைப்பூவை மாற்றம் செய்துள்ளேன். எனவே என்னை இதுவரையில் ஊக்குவித்தவர்கள் அனைவரும் பின் கண்ட புதிய வலைப்பூ முகவரியில் தம்மை இணைத்துக்கொண்டு இன்று போல் என்றும் எனக்கும் எனது பள்ளி வளர்ச்சிக்கும் ஆதரவு அளித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
http://www.kalvikoyil.blogspot.com

                              இவண்........
என்றும் கல்விப் பணியில் உங்கள்.....
                                  கவி.செங்குட்டுவன்  @ செ.இராஜேந்திரன்.

Friday, December 16, 2011

உயர்நிலைப் பள்ளி துவக்க விழா.

எமது பள்ளி உயர் துவக்கப் பள்ளியில் இருந்து  உயர்நிலைப் பள்ளியாக தமிழக அரசால் தரம் உயர்த்தப்பட்டதை அடுத்து இன்று (15.12.2012)புதிய பள்ளியின் துவக்க விழா இனிதே நடைபெற்றது. விழா தற்போதைய உயர் துவக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி துவக்க விழாவிற்கான சிறப்பு பூசை நடைபெற்றது. பின்னர் புதிய பள்ளியின் பொருப்பாசிரியர் திருமதி சி. தாமரைச்செல்வி அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றார்.பின்னர் தற்போதைய பள்ளியின் தலைமை ஆசிரியரின் தலைமை உரையில் இன்றைய புதிய பள்ளி துவக்கத்திற்கான பல்வேறு கடந்த காலச் செயல்பாடுகள் பற்றி விரிவாக எடுத்துக் கூறி இப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக வளர்ச்சி கண்டு, மாணவர்களுக்கான தங்கும் விடுதியோடு செயல்பட வேண்டுமென தமது வாழ்த்தைக் கூறினார். அடுத்து பேசிய புதிய உயர்நிலைப் பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர் திரு டி. சீனிவாசன் அவர்கள் புதிய பள்ளி எவ்வாரெல்லாம் செயல்பட வேண்டுமெனக் கூறினார். பின்னர் தற்போதைய மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் கிராமக் கல்விக் குழுத் தலைவருமான திருமதி உஷாராணி குமரேசன், முன்னாள் தலைவர்கள் திரு இராதா நாகராசன், திரு வி. மாதவன்,மற்றும் உராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் வாழ்த்துரக்குப் பின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு வே. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சிறப்புரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது. விழாவில் புதிய பள்ளிக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது







Sunday, December 11, 2011

நன்றி.

                      எமது பள்ளி தமிழக அரசால் தற்போதைய உயர் துவக்கப் பள்ளி நிலையிலிருந்து,உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எமது பள்ளி கிராமங்களிலிருந்து செல்லும் சுமார் 250 மாணவர்கள் உயர்நிலைப் பள்ளி கல்விக்காக 4 கி.மீ. தூரம் செல்லும் நிலை மாற்றம் கண்டுள்ளது.
           எனவே எமது பள்ளியை தரம் உயர்த்திய தமிழக அரசுக்கும் அனவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்திற்கும் எமது நெஞ்சார்ந்த நன்றி.

Friday, December 2, 2011

எமது பள்ளி

                                      

















சிறப்பு விருது


கணிணிக் கல்வியில் சிறப்பிடம் பெற்றமைக்கான விருது எமது பள்ளிக்கு கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் திரு.சி.நா.மாகேஸ்வரன் அவர்களால் வழங்கப்பட்டது.விழாவில் அனைவருக்கும் கல்வித்திட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு க.பாஸ்கரன், மாவட்ட முதண்மைக் கல்வி அலுவலர் திரு.எம். மூர்த்தி மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள், உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பங்கு பெற்றனர்.



அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி