இந்தியத் திருநாட்டின் 61- வது குடியரசு நாள் விழா 26.01.2010 - ல் நாடு முழுமையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே எமது பள்ளியிலும் இந்தியத் திருநாட்டின் 61- வது குடியரசு நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
காலை 9 மணியளவில் பள்ளியின் மூவர்ணக் கொடியை பள்ளி கிராமக் கல்விக் குழுவின் தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சித் தலைவருமான திரு இராதா நாகராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற மாணவர்களுக்கான பசளிப்பு விழாவிற்கும் அவரே தலைமை தாங்கினார். முன்னதாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பின்னர் கிராமக் கல்விக் குழுத் தலைவர் அவர்கள் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைவரயும் ஊராட்சியின் சார்பிலும் கிராம மக்களின் சார்பிலும் சிறப்பு செய்தார். மாணவர்கள் தேசிய எழுச்சியை உண்டாக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் பலர் தாமாகவே முன் வந்து பாரதியார் பாடல்களைப் பாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
பின்னர் விழாவில் கலந்துக்கொணட பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. கே.பி.திருவேங்கடம்,கட்டிடக் குழுத் தலைவர் திரு.மோகன்,ப்ற்றோர் ஆசிரியர் கழத் துணைத்தலைவர் திரு கே.எம்.எத்திராஜ், உள்ளிட்ட பலரின் வாழ்த்துரைகளுக்குபின் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அழகிய கைக் கடிகாரங்கள் பரிசாக வ்ழங்கப்பட்டது.
இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு. ந.இராஜசூரியன் அவர்களின் நன்றியுரைக்குப் பின் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது
விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்கிறார்.
இத்தளத்தை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாய் உள்ளது...
ReplyDeleteவாழ்த்துக்கள் அனைவருக்கும்..