Tuesday, January 26, 2010

குடியரசு தினவிழா!


               
              இந்தியத் திருநாட்டின் 61- வது குடியரசு நாள் விழா 26.01.2010 - ல் நாடு முழுமையும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாகவே எமது பள்ளியிலும் இந்தியத் திருநாட்டின் 61- வது குடியரசு நாள் விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
     காலை 9 மணியளவில் பள்ளியின் மூவர்ணக் கொடியை பள்ளி கிராமக் கல்விக் குழுவின் தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சித் தலைவருமான திரு இராதா நாகராஜ் அவர்கள் ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற மாணவர்களுக்கான பசளிப்பு விழாவிற்கும் அவரே தலைமை தாங்கினார். முன்னதாகப் பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ.இராஜேந்திரன் அவர்கள் அனைவரையும் வரவேற்றார். பின்னர் கிராமக் கல்விக் குழுத் தலைவர் அவர்கள் பள்ளித் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைவரயும் ஊராட்சியின் சார்பிலும் கிராம மக்களின் சார்பிலும் சிறப்பு செய்தார். மாணவர்கள் தேசிய எழுச்சியை உண்டாக்கும் வகையில் பள்ளி மாணவர்கள் பலர் தாமாகவே முன் வந்து பாரதியார் பாடல்களைப் பாடி பார்வையாளர்களை பரவசப்படுத்தினர்.
                 பின்னர் விழாவில் கலந்துக்கொணட பள்ளிப் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு. கே.பி.திருவேங்கடம்,கட்டிடக் குழுத் தலைவர் திரு.மோகன்,ப்ற்றோர் ஆசிரியர் கழத் துணைத்தலைவர் திரு கே.எம்.எத்திராஜ், உள்ளிட்ட பலரின் வாழ்த்துரைகளுக்குபின் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அழகிய கைக் கடிகாரங்கள் பரிசாக வ்ழங்கப்பட்டது.
                  இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் திரு. ந.இராஜசூரியன் அவர்களின் நன்றியுரைக்குப் பின் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது
                   விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்கிறார்.








Monday, January 25, 2010

புதிய தலைமுறையில் எமது பள்ளி.

இவ்வார (ஜனவரி 28) "புதிய தலைமுறை" இதழில் 'கீழே பார்க்கும் நட்சத்திரங்கள்' என்ற தலைப்பில் எமது பள்ளி பற்றிய சிறப்புக் கட்டுரை இடம்பெற்றுள்ளது. பள்ளி பற்றிய செய்திகளை சிறப்புடன் வெளியிட்ட இதழாசிரியர் திரு. மாலன் அவர்களுக்கும் கட்டுரையாளர் திரு. யுவகிருஷ்ணா அவர்களுக்கும் மிக்க நன்றி.

கவி. செங்குட்டுவன்,
ஊத்தங்கரை.
அலைபேசி : 9842712109/ 9965634541
தொலைபேசி : 04341- 223011/223023
மின்னஞ்சல் : rajendrankavi@yahoo.co.in/ kavi.senguttuvan@gmail.com
வலைப்பூ : http:pumskottukarampatti.blogspot.com

Tuesday, January 19, 2010

பொங்கல் ஊரக விளையாட்டுப் போட்டிகள்


மூன்றம்பட்டி ஊராட்சி அளவிலான பொங்கல் ஊரக விளையாட்டுப் போட்டிகள் 12.01.2010 அன்று ஊராட்சி ஊரக விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் இவ் ஊராட்சியைச் சேர்ந்த 4 பள்ளிகளின் மாணவர்கள் கலந்துக்கொண்டனர். அதில் எமது பள்ளி மாணவர்கள் தனி நபர் விளையாட்டில் 6 முதல் பரிசுகளையும் 3 இரண்டாம் பரிசுகளையும், குழு விளையாட்டில் 1 முதல் பரிசையும் 1 இரண்டாம் பரிசையும் பெற்று ஒட்டு மொத்த பரிசுகளில் அதிக பரிசுகள் பெற்ற பள்ளியாக சாதனை படைத்துள்ளனர். அதன் விபரம் பின் வருமாறு..... மு. தங்கவேல்..... ஜுனியர் ஆண்கள் சதுரங்கம் முதல் பரிசு. தி. பிரபு...... ஜுனியர் ஆண்கள் சதுரங்கம் இரண்டாம் பரிசு. சு. பிரியா....ஜுனியர் பெண்கள் சதுரங்கம் முதல் பரிசு. மு. கங்காதரன்.... சப்ஜுனியர் ஆண்கள் சதுரங்கம் இரண்டாம் பரிசு. க.வெண்ணிலா... சப் ஜுனியர் பெண்கள் சதுரங்கம் முதல் பரிசு. மு.வசந்தகுமார்.... சப் ஜுனியர் ஆண்கள் கேரம் முதல் பரிசு. கி. நர்மதா.....சப் ஜுனியர் பெண்கள் கேரம் முதல் பரிசு. இரா. திருப்பதி.... ஜுனியர் ஆண்கள் நீளம் தாண்டுதல் முதல் பரிசு. தி. இளவரசன்.....சப் ஜுனியர் ஆண்கள் 100 மீட்டர் ஒட்டம் முதல் பரிசு. த. அனிதா, இரா. பவித்ரா ஆகியோர் ஜுனியர் வலைப் பந்து போட்டியில் முதல் பரிசும், தா. இளமதி, கோ. பாரதி ஆகியோர் இரண்டாம் பரிசும் பெற்றனர்.

Monday, January 18, 2010

ஊரக நூலகப் போட்டிகள்

மூன்றம்பட்டி ஊராட்சி சார்பிலான ஊரக நூலகப் போட்டிகள் 24.12.2009 - ல் கொட்டுகாரம்பட்டி ஊரக நூலக வளாகத்தில் நடைபெற்றது. அதில் கீழ்க் கண்ட போட்டிகள் நடத்தப்பட்டது.
1.நூல்கள் நினைவாற்றல் போட்டி,
2.வரைபடத்தில் இடங்களைக் குறிக்கும் போட்டி,
3.பேச்சுப் போட்டி,
4.பாரதியார் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டி.
இப்போட்டிகளில் இவ் ஊராட்சியைச் சேர்ந்த 4 பள்ளிகள் பங்கு பெற்றன. அதில் எமது பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையிலான பரிசுகள் பெற்று சாதனை படைத்தனர்.

நூலக நினைவாற்றல் போட்டியில் பங்கு பெறும் மாணவர்கள்............

பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள்..................



பாரதியார் கவிதைகள் ஒப்புவிக்கும் போட்டியில் மாணவர்கள்.............

விழாவில் சிறப்புரை ஆற்றும் பள்ளித் தலைமையாசிரியர்.................

விழாவில் சிறப்புரை ஆற்றும் ஒன்றிய ஆணையாளர்.........

விழாவில் கலந்துக்கொண்ட மாணவர்கள்.................

பரிசுகள் பெறும் மாணவர்கள்..................

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி