ஊத்தங்கரையில்
இயங்கி வரும் விடுதலை
வாசகர் வட்டம் என்ற அமைப்பு
மாதம்தோறும் ஓர் நிகழ்வை நடத்தி வருகிறது. அதில் அந்தந்த மாதத்தின் சிறப்பு நாட்கள்
மற்றும் சிறப்பாளர்களின் பிறந்த நாட்களை அடிப்படையாக வைத்து கருத்தரங்குகளும், படத்
திறப்பும், ஊரின் சிறந்த சாதனையாளர்களை அடையாளம் காட்டிடும் வகையில் மாதம் ஒருவரைத்
தேர்வு செய்து அவருக்கு பாராட்டு விழாவும் நடத்துகிறது. அவ்வகையில் இம்மாதம் 19.08.2012 உலக மனிதநேய நாள் ஆதலால், உலக மனித நேயக் கருத்தரங்கமும், 26.08.2012 திரு.வி.க. பிறந்த நாள் ஆகையால், தமிழ்த் தென்றல் திரு.வி.க படத்திறப்பும் கவி.செங்குட்டுவன் ஆகிய எனக்கு பாராட்டு
விழாவும் வரும் 26.08.2012 ஞாயிறு அன்று நடத்த உள்ளனர். எனவே அவ்விழாவில்
அனைவரும் பங்கு பெற்று விழாவினைச் சிறப்பிக்கவும், என்னை வாழ்த்திடவும் அன்புடன் வேண்டுகிறேன்.
அழைப்பு இணைத்துள்ளேன்.
ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
Friday, August 24, 2012
Subscribe to:
Post Comments (Atom)
அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி
-
இன்று ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, கொட்டுகாரம்பட்டியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. அதில் பள்ளி மாணவர்கள் மிக ஆர்வத்தோடு...
-
இன்று 15.07.2010 – ல் எமது பள்ளியில் கர்மவீரர் காமராசரின் பிறந்த நாள் விழா கல்வி வளர்ச்சி நாள் விழா வாகக் கொண்டாடப்பட்டத...
-
ஒன்றிய அளவில் சிறப்பிடம் கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் ஊத்தங்கரை ஒன்றிய அளவில் நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கான விளைய...
-
தமிழ் இணைய மாநாட்டு துவக்க விழாவில் பள்ளித் தலைமையாசிரியர் தமிழ அரசால் நடத்தப்பட்ட உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் ...


No comments:
Post a Comment