ஒவ்வோர் ஆசிரியருக்கும் தான் பணியாற்றும் பள்ளி ஓர் கோயில்தான். அதன் அடிப்படையிலேயே நான் பணியாற்றும் பள்ளியின் சிறப்பு நிகழ்வுகளைத் தாங்கி வரும் இந்த வலைப்பூ - விற்கு கல்விக் கோயில் எனப் பெயரிட்டுள்ளேன். மேலும் அரசுப் பள்ளியும் கூட தரமான கல்வியையும், சீரிய ஒழுக்கத்தையும் அளிக்கும் பள்ளியே என்பதை உலகிற்கு உணர்த்திடவே இச்சிறிய முயற்சி.
Sunday, August 15, 2010
இந்திய சுதந்திரத் திருநாள் விழா
இன்று இந்திய சுதந்திர திருநாள் விழா எமது பள்ளியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு கிராமக் கல்விக் குழுத் தலைவரும், மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான இராதா நாகராசன் அவர்கள் தலைமை தாங்கினார். விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி.திருவேங்கடம், துணைத் தலைவர் கே.எம்.எத்திராசு உள்ளிட்ட பொறுப்பாளர்களும் பெற்றோர்களும் அதிக அளவில் கலந்துக்கொண்டனர்.
விழாவில் மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)












































ஐயா! வாழ்க! வளர்க! உங்கள் தொண்டு தொடர இறைவனைப்பிரார்த்திக்கிறேன். தங்களின் வலைப்பூவின் சிறப்பினை http://kalvithagaval.blogspot.com/2010/08/blog-post_4160.html இந்தப்பக்கத்தில் பதிவு செய்துள்ளனர்.
ReplyDeleteதங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteநல்லதொரு பணி...மேலும் மேலும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)
ReplyDeleteஅருமை. தங்களின் பணி மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteஐயா,
ReplyDeleteதங்களின் முயற்சி பலரையும் ஊக்குவிக்கும், இதனால் சிறு சிறு பள்ளிகளும் இவ்வாறு வலைபூவினை உருவாக்குவதால் தொடக்க பள்ளி மாணவர்களும் கணினி அறிவை வளர்க்க உதவும்.
என்றும் தங்கள் மாணவனாய்,
ராஜேஸ் குமார்
என் பள்ளி நாட்களை ஞாபகபடுத்திவிட்டது சார் உங்கள் வலைத்தளம்..
ReplyDelete