Sunday, July 11, 2010

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்.


ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி கொட்டுகாரம்பட்டியில் 2010 - 11 கல்வி ஆண்டுக்கான முதல் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் 18.06.2010 - ல் நடைபெற்றது.
                 கூட்டத்திற்கு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு கே.பி. திருவேங்கடம் அவர்கள் தலைமை தாங்கினார். கிராமக் கல்விக் குழுத் தலைவரும் மூன்றம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவருமான திருமதி நா.இராதா நாகராஜ் அவர்கள் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் திரு. செ.இராஜேந்திரன் அவர்கள அனைவரையும் வரவேற்றார் அப்போது அவர் தனது வரவேற்புரையில் பள்ளியின் தற்போதைய நிலைமை மற்றும் இவ்வாண்டுக்கான புதிய செயல் திட்டங்கள், பள்ளி மற்றும் மாணவர் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார்.
                 பின்னர் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், கிராமக் கல்விக் குழுத் தலைவர், பெற்றொர்கள் உள்ளிட்டோரின் கருத்துரைகளுக்குப் பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.
        (1)               ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் இப்பள்ளியின் தலைமையாசிரியர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களையும் இக்குழு பாராட்டுகிறது.
      (2)                இப்பள்ளியின் அனைத்து வளர்ச்சித் திட்டங்களுக்கும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம் முழு ஒத்துழைப்பை வழங்குதல்.
      (3)               பள்ளி மாணவர்களுக்கு இவ்வாண்டு பெல்ட் மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குதல்.
                  கூட்டத்தில் அதிக அளவில் பெற்றோர்களும் பொதுமக்களும் கலந்துக்கொண்டனர். இறுதியில் பள்ளி உதவி ஆசிரியர் நா.இராஜசூரியன் அனைவருக்கும் நன்றி கூறினார்.




No comments:

Post a Comment

அதிகமாக பார்க்கப்பட்ட செய்தி